காத்தான்குடியில் இடம்பெற்ற க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்.................

 காத்தான்குடியில் இடம்பெற்ற க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்.................

மட்டக்களப்பு மாவட்ட செயலக க்ளீன் ஸ்ரீ லங்கா செயலணியின் வழிகாட்டலில் காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர சபை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இணைந்து காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக் கிழமை(16) காலை காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்றது.
நமது கடற்கரையை அழகுபடுத்துவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு படையினர், நகர சபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








Comments