ரன்விமன வீடுபயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வும், சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும்..........

 ரன்விமன வீடுபயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வும், சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும்........

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 2024 ஆண்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட ரன்விமன வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வும், சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் சமுர்த்தி அரனலு கடன் வழங்கும் நிகழ்வும் (28)  அன்று நடைபெற்றது.

 கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு அவர்கள் கலந்து கொண்டார்.

 இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூக பாதுகாப்பு விடய உத்தியோகத்தர் எம்.ஏ.பெனாசிர் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Comments