பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் முன்னால் அமைச்சர் மௌலானா அவர்களால் ஒளியூட்டப்பட்டது...

 பூநொச்சிமுனை  இக்றா வித்தியாலயத்தின்  விளையாட்டு மைதானம் முன்னால் அமைச்சர் மௌலானா அவர்களால் ஒளியூட்டப்பட்டது...

மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் மக்களது தேவைகளின் நிமித்தம் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற தூரநோக்குச் சிந்தனையின் அடிப்படையில், முன்னால் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களால் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதனடிப்படையில்  முன்னால் அமைச்சர் அவர்களிடம் பூநொச்சிமுனை  அல் பரக்கத் கிராமிய கடத்தொழில் அமைப்பின்  செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஆதம் எஹ்யா மற்றும்  பூநொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.எச்.ஏ.அஸீஸ் ஆகியோர் அப்பகுதியில் வாழும் மக்களது மனக்குறைகள் மற்றும் அபிவிருத்தியில் பின்னடைவு நிலை ஆகியவற்றை எடுத்தியம்பி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அப்பகுதியில் முன்னால் அமைச்சர் அவர்களால் சிறுவர் பூங்கா நிர்மாணம், பள்ளிவாயல்கள் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளுக்கான ஒதுக்கீடுகள், மீனவர் சங்கத்திற்கான அபிவிருத்திகள் மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கல் என பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை அப்பகுதி பெற்று வருகிறது.

அந்தவகையில் பூநொச்சிமுனை மக்களது மிகப்பிரதானமான மைதானமாகவும், பல விளையாட்டு போட்டிகள் இடம்பெறும் இடமாகவும் இக்ரா வித்தியாலய மைதானம்  காணப்படுகிறது. இதனால் இம்மைதானத்தினை ஒளியூட்ட வேண்டிய தேவையிருப்பதனை அறிந்த முன்னால் அமைச்சர் அவர்கள், இதற்காக 500,000/= ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தார்கள். 

இந்நிதியில் ஒளியூட்டப்பட்ட இக்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் உத்தியோகபூர்வ அங்குராப்பண நிகழ்வு  பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தின் அதிபர் ABA.ரஸூல் அவர்களது தலைமையில் (20) அன்று நடைபெற்றது. இந்நிகழ்வினை முன்னிட்டு சிநேகபூர்வ கிரிக்கட் போட்டியொன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் முன்னால் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி விளையாட்டுக்கழகத்தினர் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.





Comments