'நஞ்சற்ற வீட்டுத்தோட்டம் மூலம் முயற்சி இன்றிய மேலதிக வருமானம்' இயற்கை விவசாய பயிற்சிநெறி.................

 'நஞ்சற்ற வீட்டுத்தோட்டம் மூலம் முயற்சி இன்றிய மேலதிக வருமானம்' இயற்கை விவசாய பயிற்சிநெறி.................

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது குருக்கள்மடம் ழகரன் உணவுக் காடுடன் இணைந்து ஏற்பாடு செய்த 'நஞ்சற்ற வீட்டுத்தோட்டம் மூலம் முயற்சி இன்றிய மேலதிக வருமானம்' எனும் தலைப்பிலான விவசாய பயிற்சிநெறியானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் (25) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.  

இதன்போது விதைகள் சேமிப்பு, விதைகள் பராமரிப்பு, பாரம்பரிய நெல்லினங்கள் ஹைட்ரோபோனிக் அசோலா மற்றும் மாடு வளர்ப்பு.  பாதுகாப்பான கைகளில் உணவு உற்பத்தி மற்றும் வீட்டுத் தோட்ட கழிவுகளை காசாக்குதல்.  தோட்ட வடிவமைப்பும் திட்டமிடுதலும்  போன்ற தலைப்புகளின் கீழ் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த பயிற்சிநெறியின் வளவாளர்களாக பொறியியலாளர்  MM.ரிலா  (Red Rose Organics) நேசன்ஐயா மற்றும் செய்னுலாப்தீன் (Award winning organic farmers) ஆகியோர் கலந்துகொண்டு இந்த பயிற்சிநெறியை மிகவும் சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

இந்த பயிற்சிநெறியில் கிராம உத்தியோகத்தர்கள், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Comments