அலிஸாஹிர் மௌலானா அவர்களால் செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் மற்றும் தளபாடங்கள் கையளிப்பு............

 அலிஸாஹிர் மௌலானா அவர்களால் செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்திற்கு  போட்டோபிரதி இயந்திரம் மற்றும் தளபாடங்கள் கையளிப்பு............

கல்குடாப் பிரதேசத்தின் செம்மண்ணோடைப் பகுதியானது முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியினால் பரவலான அபிவிருத்திகளை அடைந்திருக்கின்றது. அவரின் முயற்சியால் கடந்த ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் செம்மண்ணோடையில் பல பாடசாலைகள், முன்பள்ளிகள், பள்ளிவாயல்கள் மற்றும் கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் என்பன அபிவிருத்தி அடைந்திருக்கின்றன. 

அதனடிப்படையில்  செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்திற்கான அவசியத் தேவையாகவிருந்த போட்டோபிரதி இயந்திரம் மற்றும் தளபாட வசதிகளுக்காக முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களால் சுமார் 300,000/-ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட போட்டோபிரதி இயந்திரம் மற்றும் தளபாடங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு (10) பாடசாலையின் அதிபர் AL.அன்ஸார்  அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் செம்மண்ணோடைக்கான அபிவிருத்திப்பணிகளிலும் கடந்த கால அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் இப்பாடசாலைக்கான  பல தேவைகள்  முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களினால் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டதுடன், மேலும் இப்பாடசாலைக்கான காணியினை பெற்றுக்கொள்வதிலே கடந்த காலங்களில் ஏற்பட்ட இடர்பாடுகளின் போது செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கதாகும்.


Comments