சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் .........

 சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் .........

 (வரதன்) ''சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்'' எனும் தொனிப்பொருளில், ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன்ங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்  ஓர் அம்சமாக 'சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்' நிகழ்ச்சித்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடற்கரையை அன்மித்த 23 பிரதேசத்தில் சுத்தம் செய்யும் பிரதான நிகழ்வு பாலமீன்மடு கடற்கரை பிரதேசத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்  ஜேஜே. முரளிதரன் தலைமையில் (16) இன்று காலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

 கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாகாண கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் பணி ஆனது மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஒரே நேரத்தில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன், கடற்கரைப் பகுதிகளை அழகுப்படுத்தும் நோக்கில் இந்த சுத்தப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுகின்ற கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்ற சுற்றாடலுக்கு பாதிக்கின்ற பொருட்களை அப்புறப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகள்  இங்கு முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், மட்டக்களப்பு மாநகர சபையின் உயர் அதிகாரிகள்,  அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், சுற்றாடல்  அதிகார சபையின் உயர் அதிகாரிகள் என பலரும் இந்த கடற்கரை சுத்தப்படுத்தும் மாவட்ட கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தில் கலந்து கொண்டனர்.






Comments