மட்டக்களப்பில் தேசிய வாசிப்பு மாத விருது வழங்கும் நிகழ்வு ............
மட்டக்களப்பு மாநகர சபையும், பொது நூலகங்களும் இணைந்து தேசிய வாசிப்பு மாத விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு நகர மண்டபத்தில் மாநகர ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரதீபன் மற்றும் மட்டக்களப்பு பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் மற்றும் மாநகர சபையில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளான பிரதம கணக்காளர் கே.அரசரட்ணம், பொறியியலாளர் சி.லிங்கேஸ்வரன், கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.துஷ்யந்தன், நிர்வாக உத்தியோகத்தர் கி.பிரேமகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன் துறை சார்ந்து சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளும் அதிதிகளால் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment