கவிஞர் இரா.மேரியன் ''மூன்றாவது கண்'', ''கரைதொடும் அலைகள்''' கவிதை நூல்கள் வெளியீட்டு .................

கவிஞர் இரா.மேரியன்  ''மூன்றாவது கண்'', ''கரைதொடும் அலைகள்''' கவிதை நூல்கள் வெளியீட்டு .................

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம், மகுடம் கலை இலக்கிய வட்டம் இணைந்து நடாத்திய கவிஞர் இரா.மேரியன் அவர்களின் 'மூன்றாவது கண்,  'கரைதொடும் அலைகள்' கவிதை நூல்கள் வெளியீட்டு விழா  மட்டக்களப்பு தமிழ்  சங்க  மண்டபத்தில்   இடம் பெற்றது.

 ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல், மௌன இறைவணக்கம் என்பன இடம் பெற்றன, மகுடம் கலை இலக்கியவட்ட தலைவர் வி .மைக்கல் கொலின் வரவேற்புரை வழங்கினார்.தமிழ் சங்க பொதுச்செயலாளர், சட்டத்தரணி மு.கணேசராஜா வெளியீட்டுரையாற்றியதுடன். கவிஞர் செங்கதிரோன் க.கோபாலகிருஷ்ணன் மற்றும்  சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் ஆகிய இருவரும் நூல்களுக்கு நயவுரை வழங்கியிருந்தனர்.

 மட்டக்களப்பு தமிழ் சங்கத்தலைவர்  சைவ புரவலர்  வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற  கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக  சிரேஷ்ட விரிவுரையாளர், உதவும் கரங்கள் இல்லத்தலைவர்  ச.ஜெயராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக  மட்டக்களப்பு தமிழ் சங்க முன்னாள்  பொதுச்செயலாளர்  சே.தபராசா அவர்களும் பங்கேற்றிருந்தனர் .

இதில் முதன்மை பிரதிகளை  'மூன்றாவது கண்'  ஹை சிந்த்   வசந்த வள்ளி  அன்டன்  அவர்களும் 'அந்த கரை தொடும் அலைகள்' கவிஞர்  இ.எட்மன் விஜயநாதன் அவர்களும்  பெற்றுக்கொண்டனர் .

 நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏராளமான  பொது மக்களும், இலக்கிய ஆர்வலர்களும்    கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






Comments