சித்தாண்டியிலிருந்து மட்டு போதனா வைத்தியசாலை வரை புதிய பஸ் சேவை..............

 சித்தாண்டியிலிருந்து மட்டு போதனா வைத்தியசாலை வரை புதிய பஸ் சேவை..............

(கடோ கபு) இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு கிளையினால் சித்தாண்டியிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை புதிய பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின், மட்டக்களப்பு சாலை முகாமையாளராக கந்தசாமி சிறிதரன் அவர்கள் கடமையேற்றதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் போக்குவரத்தை சீரமைக்கும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

 அந்த வகையில் பயணிகளினதும், மாணவர்களினதும், நோயாளர்களினதும் நன்மை கருதி பல பகுதிகளிலிருந்தும் பஸ்களை இயக்கும் முகமாக புதிய பஸ் சேவைகளை தொடங்கி வருகிறார். மட்டக்களப்பு நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்காக பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டதுடன், எல்லைக் கிராமங்களிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசைலையை மையமாகக் கொண்டு பல பஸ் சேவைகள் அண்மைய காலங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

 அதன் ஒரு கட்டமாகவே சித்தாண்டி நகரிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும், சித்தாண்டியிலிருந்து வாழைச்சேனைக்கும் வரும் நோயாளர்களின் நன்மை கருதி இன்று (22) புதிய பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், குறிப்பாக முதியவர்களின் வசதிக்காக, புதிய பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கபட்டுள்ளதாக சாலை முகாமையாளர் கந்தசாமி சிறிதரன் தெரிவித்தார்.

பஸ்ஸினது பயண பாதை: சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயில் ஊடாக மட்டக்களப்பு மருத்துவமனை, அத்தோடு சித்தாண்டி - வாழைச்சேனை

இந்த சேவையால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று பாதுகாப்பாக வீடு  திரும்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது

Comments