மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவது தொடர்பான மீளாய்வு கூட்டம்...............
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவது தொடர்பான மீளாய்வு கூட்டம்...............
(வரதன்) கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவது சம்பந்தமாக பெண்கள் அபிவிருத்தி மாவட்ட மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எஸ்.பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (21) இடம் பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜேஜே.முரளிதரன் இதில் கலந்து கொண்டு, மாவட்டத்தில் பெண்களுக்காக முன்னெடுக்கப்படும் நலன்புரி வாழ்வாதாரத் திட்டங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
பெண்களின் அபிவிருத்தி, வாழ்வாதாரம், உரிமை பாதுகாப்பு மாவட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவது சம்பந்தமாக இங்கு ஆராயப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்திற்கு அமைவாக உதவிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்டத்திலுள்ள பெண்களுக்கான அபிவிருத்தி திட்டத் உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பெண்கள் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்த அபிவிருத்தி மீலாய்வுக் க் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment