தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்...............

 தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்...............

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்காப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் ஆகிய இருவரின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலகத்தில் (18) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைந்து தொற்றாநோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இருவாரத்திற்கு ஒரு தடவை பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வாழைச்சேனை சுகாதார பிரிவில் தற்போது டெங்கு பரவுதலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மாவட்டத்தில் தொழுநோய், திண்மகழிவு முகாமைத்துவம், கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்தல், போன்ற பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், வைத்திய நிபுணர்கள், பிரதேச செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வலய கல்வி பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.




Comments