கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி றன்விமன வீடு அரச அதிபர் ஜே.ஜே.முரளிதரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.............
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி றன்விமன வீடு அரச அதிபர் ஜே.ஜே.முரளிதரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.............
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவில் 2024ம் ஆண்டு சமுர்த்தி சௌபாக்கியா றன்விமன வீட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளியான எம்.எம்.சல்மியா என்பவரின் வீடு சிறந்த முறையில் பூரணப்படுத்தப்பட்டு (18)அன்று அரச அதிபர் ஜே.ஜே.முரளிதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளியின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரச அதிபர் ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கலந்து கொள்ள, சிறப்பு அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத் கலந்து கொண்டனர்.
இதன் போது கோறளைப்பற்று மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாஉல் ஹக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் அவர்களும், சமுர்த்தி முகாமையாளர்களான எம்.ஐ.ஏ.அஸீஸ், ஆர்.மதியழகன், என்.விஜிதன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், சகாத் நிதிய பிரதிநிதி எம்.ரீ.அஸ்ரப், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சுபைர், சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர்களான எம்.என்.எம்.சாஜஹான், பி.கவிதா, சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment