மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உலக ஈரநிலங்கள் தின நிகழ்வு ....
(கடோ கபு) மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் உலக ஈரநிலங்கள் தின நிகழ்வு (25) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளை மையப்படுத்தி நடத்தப்பட்டது.
காலை 8 மணிக்கு மண்முனை பாலத்தை அண்மித்த சதுர்ப்பு நிலப் பகுதியில் கண்டல் தாவரங்கள் அதிதிகளால் நாட்டப்பட்டதுடன், ஆரம்பமான இந் நிகழ்வு அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுடன் நிறைவுக்கு வந்தது.
இந் நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அவர்களும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பதவி நிலை உத்தியோகத்தர்கள் அத்தோடு மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினது செயலாளர் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உலக ஈர நிலங்கள் தின நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் மற்றும் மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய சுற்றாடல் கழக மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment