மட்டக்களப்பு புற்தரை மைதானத்தில் முதல் தடவையாக கால் பதித்த திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி......

மட்டக்களப்பு புற்தரை மைதானத்தில் முதல் தடவையாக கால் பதித்த திருகோணமலை  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி......

திருகோணமலை, இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக புற்தரை மைதானமொன்றில் ஒரு போட்டியில் கலந்து கொண்டது. மட்டக்களப்பில் அமைந்துள்ள கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தில்  அனுபவமிக்க கோட்டைமுனை விளையாட்டு கிராம அணியை (EPP) எதிர்த்து  கலந்து கொண்ட போட்டி சமநிலை செய்தது மட்டுமன்றி, அப்போட்டியில் இந்துவின் மைந்தர்களான அணித்தலைவர் டிதுஜன் மற்றும் அணியின் உபதலைவர் ஹார்த்திகேயன் ஆகியோர் தமது புற்தரை மைதானத்தில் கன்னி அரைச்சதங்களையும்  பூர்த்தி செய்து கொண்டு தமது முதற்போட்டியை  வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

15 வயதிற்குட்பட்ட இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற திருகோணமலை இந்துக்கல்லூரி அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது, கோட்டைமுனை (EPP) அணி 35 ஓவர் முடிவில் 191/7 என்ற வெற்றி இலக்கை தீர்மானித்தனர். 

191 என்ற ஓட்ட இலக்கை துரத்திய இந்துக்கல்லூரி அணியினர் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிய போதும், அணியின் உபதலைவரும் ஆரம்ப இடதுகை துடுப்பாட்ட வீரருமான ஹார்த்திகேயனுடன், இணைந்து கொண்ட அணியின் தலைவர் டிதுயன் தனது சாதூர்யமானதும் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு இருவரது இணைப்பாட்டமும் வலுச்சேர்த்த போதும், வெற்றிக்காக இறுதிநேரத்தில் இரண்டு பந்திற்கு ஒரு ஓட்டம் தேவை என்றநிலையிலும் கடைசிப்பந்தில் ஏற்பட்ட துரதிஸ்ட்டமான ஆட்டமிழப்புடன் போட்டி 191/8 என்ற ஓட்ட பெறுதியுடன் சமநிலையை அடைந்தது. 

இதன் போது கருத்து தெரிவித்த  இந்துக்கல்லூரியின் பயிற்றுவிப்பாளர்  மட்டக்களப்பில் அமையப்பெற்றது போல் இவ்வாறான புற்தரை மைதானமொன்று திருமலையில் அமையப்பெற்றால், திருமலை இந்துவின் மைந்தர்களும் கிரிக்கெட் துறையில் இலங்கை அணிக்காக சாதிப்பார்கள் என்பது நிதர்சனம் என்றார்.

Comments