இந்துக்கல்லூரியில் இரத்தான நிகழ்வு....

 இந்துக்கல்லூரியில் இரத்தான நிகழ்வு....

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79வது ஆண்டை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு (02)ம் திகதி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

தற்போதைய கால கட்டத்தில் இரத்த தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதை ஒரு வேலைத்திட்டமாகவும் கொண்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இனைந்து இவ் இரத்தான நிகழ்வு நடைபெற்றது. இதன் போது பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.















Comments