கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 77 வது சுதந்திர தின நிகழ்வு...............

 கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 77 வது சுதந்திர தின நிகழ்வு...............

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தின நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 04.02.2025 அன்று காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் அவர்கள், கணக்காளர் தயானி சசிகுமார் அவர்கள், நிருவாக உத்தியோகத்தர் புனிதநாயகி ஜெயக்குமார் அவர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர் புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள் மற்றும் அலுவலக உள்ளக, வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களின் சுதந்திர தின விசேட உரை இடம்பெற்றது. மேலும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டன.


Comments