மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற 77வது சுதந்திர தின நிகழ்வு.................

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற 77வது சுதந்திர தின நிகழ்வு.................

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் (04) திகதி மாவட்டசெயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாவட்ட செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை இடம்பெற்றதுடன், பயன் தரு பழக்கன்றுகள் பதவிநிலை உத்தியோகத்தர்களினால் மாவட்ட செயலக வளாகத்தில் நடப்பட்டதுடன் உத்தியோகத்தர்களுக்கு பயன்தரும் மூலிகை மரக் கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர்களான சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), பிரதம கணக்காளர். பிரதம பொறியியலாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், உயர் அதிகாரிகள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது விசோட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலி அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










Comments