மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த 5 வயது பாஸ்கரன் ஷஸ்வின் ......

 மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த 5 வயது பாஸ்கரன் ஷஸ்வின் ......

 ஐந்து நிமிடங்களுக்குள் 150 பொது அறிவுக்கேள்விகளுக்கு பதிலளித்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மட்டக்களப்பை சேர்ந்த 5 வயது பாஸ்கரன் ஷஸ்வின் கௌரவிக்கப்ட்டார்.

இவ்கௌரவிப்பு நிகழ்வில் புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பின் பணிப்பாளர் சா.சுதாகரன், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசகரும் பாடசாலை அதிபர் ஆ.குலேந்திரராசா சிறப்பு விருந்தினர்களாகவும்,   மட்/சென்மேரிஸ் சர்வதேச பாடசாலை அதிபர் ராஜினி பிரான்சிஸ் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் சிறப்பு நடுவர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைவர் சிவ.வரதகரன், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் செயற்குழு  உறுப்பினர் கவிஞர் அ.தனுறாஜ் கலந்து கொண்டனர்.







 

Comments