முதல் தடவையாக மயிலம்பாவெளி கிராமத்தின் பிரதான வீதியில் வாராந்த சந்தை திறந்து வைப்பு......

 முதல் தடவையாக மயிலம்பாவெளி கிராமத்தின் பிரதான வீதியில் வாராந்த சந்தை திறந்து வைப்பு......

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக் கருவிலே தோற்றம் பெற்ற   'க்ளீன் ஸ்ரீ லங்கா' வேலை திட்டமானது  மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திலகநாதன் அவர்கள் தலைமையில் (12) அன்று  முதல் தடவையாக மயிலம்பாவெளி கிராமத்தில் பிரதான வீதியில் வாராந்த சந்தை திறந்து வைக்கப்பட்டது.  

மயிலம்பாவெளி கிராமத்தை சுற்றி தன்னாமுனை,   சவுக்கடி,  தளவாய்,  விபுலானந்தபுரம், ஆறுமுகத்தான் குடியிருப்பு என பல கிராமங்கள் இருக்கின்றன.  இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் சந்தை வசதிக்காக 5 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்ல வேண்டிய தேவை இருக்கிறது,   இதனைக் கருத்தில் கொண்டு இந்த சந்தை அமைக்கப்பட்டு,  இக் கிராம மக்களும்  நடைபயணமாக  சென்று பொருட்களை  குறைந்த  விலையில்  பெற்றுக் கொள்ளக் கூடியதாக தற்போது அமைந்துள்ளது.  

மற்றும் அந்த ஊரிலே உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய பொருட்களை சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பும் உருவாக்கப்பட்டு இருக்கிறது,  இதன் மூலம் சாதாரண மக்கள் பெரிதும் பயனடைவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.





Comments