மாவடி ஓடை விவசாயிகளின் விளை நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம்......
மாவடி ஓடை பகுதியில் உள்ள அணைக்கட்டின் வான் கதவுகளை சரியான நேரத்தில் திறந்து விடாத காரணத்தினால், விவசாயிகளின் விளை நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக விவசாயிகள் முன்வைத்த குற்றச்சாட்டினை பார்வையிடுவதற்காக, தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் திலகநாதன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணிப்பாளர் சுரேஷ் ரோபட், பொறியாளர் ஜான்சன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனம் சார்பாக ரமேஷ், பிரகாஷ் ஆகியோரும் சென்று பார்வையிட்டு இருந்தனர்.
இதன் போது அப்பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் சுமூகமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதோடு எதிர்கால திட்டங்கள் பற்றியும் தோழர் திலகநாதன் எடுத்துரைத்தார்.
Comments
Post a Comment