அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட் அவர்களின் தந்தையார் நம்மை விட்டு பிரிந்தார்................
மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய இயக்குனரும், ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட் அவர்களின் தந்தையார் பெனடிக்ட் வெஸ்லி வின்சன்ட் அவர்கள் இன்று (13) நம்மை விட்டு பிரிந்தார்.
நாளை (14-01-2025) மாலை 3:00 மணிக்கு கூழாவடியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெறும் இறுதி வழிபாட்டைத் தொடர்ந்து கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கள்ளியங்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Comments
Post a Comment