மட்டக்களப்பு சிறைச்சாலைகள் திணைக்களம் வெற்றி ...................

 மட்டக்களப்பு சிறைச்சாலைகள் திணைக்களம் வெற்றி ...................

இலங்கை சோட்டோக்கான் கராத்தே சங்கத்தினரால் கடந்த சனிக்கிழமை அதாவது (11) அன்று கொழும்பு ரோயல் மாஸ்க் அரேனா உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான கராத்தே சுற்றுப்போட்டியில் பல மாகாண மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பல கழகங்கள், தனி நபர்கள் என பலரும் இப்போட்டியில் கலந்து கொண்ட போதிலும், இம்முறை வரலாற்றில் முதன் முதலாக சிறைச்சாலை திணைக்களத்தினை மையப்படுத்திய மட்டக்களப்பு வீரர்களும் இப்போட்டியில் பங்கு பெற தகைமை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னிலையாகியிருந்த 09 வீரர்களும் தலா மூன்று தங்க பதக்கங்களையும்,  மூன்று வெள்ளி பதக்கங்களையும்,  மூன்று வெண்கல பதக்கங்கள் என ஒன்பது பதக்கங்களை பெற்று சிறைச்சாலை திணைக்களத்திற்க்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

இதற்காக தனது முழு அர்பணிப்பையும் வழங்கிய மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பயிற்றுவிப்பாளர் சென்சி நல்லையா பிரபாகரன்  அவர்களுக்கும், மட்டக்களப்பின் சோட்டோக்கான் கராத்தே சம்மளத்தின் தலைவரும் பயிற்றிவிப்பாளருமான சென்சி HR.சில்வா அவர்களும் (பிரதான பயிற்றுவிப்பாளர்) மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் பயிற்றிவிப்பாளர் சென்சி தேவகாந்தன், பிரசாத் ஆகியோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.










Comments