மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறுவோரை வலுவூட்டல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்.................
(MHM.அன்வர்) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் குறைந்த வருமானம் பெறுவோரை வலுவூட்டும் செயற்திட்டத்தின் கீழ் செயலமர்வு பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் (08) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
2025 ம் ஆண்டு வலுவூட்டல் திட்டத்தினை அமுல்ப்படுத்துவது தொடர்பாக மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர் M.பிரதீபன் இச் செயலமர்வின் போது விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.ராஜ்பாபு கலந்து கொண்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு கிராம சேவக பிரிவுக்கும் 50 குடும்பங்களை வலுவூட்டுவதற்காக அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இத்திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் எனத்தெரிவித்தார்.
இச் செயலமர்வில் உதவிப்பிரதேச செயலாளர் எம்.எஸ் சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ்.எச்.முஸம்மில் மற்றும் எம்.ஏ.எம்.சுல்மி, திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர்கள் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.
வறுமையை இல்லாதொழிப்பதற்கான தங்கள் திணைக்களத்தினால் எவ்வாறான விடயங்களை மேற்கொள்ளமுடியும் என தங்களது முன்மொழிவுகளை கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment