சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்................
சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்................
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் (07.01.2025) திகதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தன்னாமுனை தொடக்கம் பிள்ளையாரடி வரையான சுமார் 3 கிலோ மீற்றர்கள் வரையான பகுதி சிரமதானம் மூலம் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment