மட்டு இந்துக்கல்லூரிக்கு 79 வயது.....
மட்டக்களப்பு நகரத்தில் பிரபல்யமான பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி தனது 79வது வருடத்தை தொட்டு கொண்டாடத் தொடங்கியுள்ளது.
1946ம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதி அமரர் நல்லையா அவர்களால் அரசினர் பாடசாலையாக தொடங்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் கோட்டைமுனை மகா வித்தியாலயமாகவும், பின் நாட்களில் இந்துக்கல்லூரியாக மாற்றம் பெற்று தற்போது செயற்பட்டு வருகின்றது .
இப்பாடசாலையில் கல்வி கற்ற பலரும் பல சாதனைக்குரிய பதவிகளில் பதவி வகித்ததோடு, தற்போதும் பதவி வகித்து வருகின்றனர். வழக்கறிஞராக, வைத்தியராக, அரச அதிபராக, ஆணையாளர்களாக, செயலாளர்களாக, பொறியியலாளராக, ஆசிரியர்களாக, அதிபர்களாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல ஒரு ஏணிப்படியாக, அத்திவாரமாக இப்பாடசாலை இருந்துள்ளது.
இந்த 79வது வருட கொண்டாட்டமானது பாடசாலை அதிபர் திரு.பகீரதன் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் கொடியேற்றப்பட்டு, பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு, சத்தியப்பிரமானம் செய்யப்பட்டது. பின்னர் பாடசாலையின் ஸ்தாபகர் அமரர் நல்லையா அவர்களின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றைய நிகழ்வின் முக்கிய நிகழ்வாக ஜனாதிபதி அவர்களின் கிளீன் ஸ்ரீலாங்கா (Clean Srilank) வேலைத்திட்த்திற்கு அமைய மட்டக்களப்பு கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்களை அகற்றும் பணி பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எஸ்.பி.எம் பவுண்டேசனின் (SPM. Foundation) உதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் சகிதம் சிரமதானம் மேற் கொள்ளப்ட்டது.
நாளைய தினம் (2025.02.02) பாடசாலை வளாகத்தில் பாரியதொரு இரத்ததான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முடியுமானவர்கள் கலந்து கொண்டு இரத்தானம் வழங்குமாறு பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவர் மு.சதீஸஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment