இன்று (11) சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் பொதுக் கூட்டமும்...........

 இன்று (11) சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் பொதுக் கூட்டமும்...........

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சமாதான நீதிவான்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் நடாத்தும் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் பொதுக்கூட்டமும் 11.01.2025 திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் பிரபல சட்டத்தரணிகள் இருவர் கலந்துகொண்டு சமாதான நீதிவான்களும் அதன் பயன்பாடுகளும் என்னும் தொனிப்பொருளில் வளவாண்மை மேற்கொள்ளவுள்ளதுடன், மேற்படி நிகழ்வில் சமாதான நீதிவான்களின் நலனினை கருத்திற் கொண்டு செயற்படும் மேற்படி சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களும் சேர்த்துக்கொள்ளப்படயிருக்கின்றனர். 

சமாதான நீதிவான்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்படும் இச் சங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்பும் சமாதான நீதிவான்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நிருவாகத்தினர்.


Comments