கிழக்கு மாகாண (Cover Up Duty) பதில் கல்விப்பணிப்பாளராக S.R.ஹசந்தி நியமனம்...........................

 கிழக்கு மாகாண (Cover Up Duty) பதில் கல்விப்பணிப்பாளராக S.R.ஹசந்தி  நியமனம்...........................

பதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சுஜாதா குலேந்திரகுமார் SLEAS-I   விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்று, கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுச் சென்றமையினால் ஏற்பட்ட, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி வெற்றிடத்திற்கு, அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர்  S.R.ஹசந்தி  சேவை மூப்பு அடிப்படையில் பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளராக (Cover Up Duty) கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபை வரலாற்றில் முதல் முதலில் நியமிக்கப்பட்ட சிங்களமொழி பேசும் பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளர்   S.R.ஹசந்தி  என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் பதவியையும் வகிப்பார். இவர் எதிர் வரும் திங்கட்கிழமை  

02.12.2024 ஆந் திகதி கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் பதவியை ஏற்றுக் கொள்வார்


Comments