மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும்...............
வெள்ள அனர்த்த நிலை காரணத்தினால், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் புகையிரத சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
வெள்ள நீரினால் புனானை - மட்டக்களப்பு வரையிலான புகையிரத பாதையில் நீர் தேங்கி காணப்பட்டதனால், நேற்று அதிகாலை முதல் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும் வழமையாக இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் பாடுமீன் புகையிரத சேவை நேற்று (27) திகதி முதல் வழமை போல் ரயில் சேவை இடம் பெறுமென மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எஸ்.பேரின்பராசா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment