சகல ஆத்துமாக்கள் திருவிழா இன்று...............

 சகல ஆத்துமாக்கள் திருவிழா இன்று...............

 (டினேஸ்) நவம்பர் 2ம் திகதியாகிய இன்று உலகில் வாழும் சகல கிறிஸ்தவர்களும் மரித்த ஆத்துமாக்களை நினைவில் கொள்ளும் நாளாகும். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மறை மாநிலத்தில் சகல ஆலய உயிர்ப்பின் இடங்களில் விசேட திருப்பலிகள் இடம்பெற்றுள்ளன. சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத சேமக்காலையிலும் இன்றைய தினம்  திருப்பலி நிறைவேற்றப்பட்டு இம்மாதம் முழுதும் விஷேடமாக மரித்த ஆத்துமாக்களுக்காக செபிக்கப்படவுள்ளது.

இன்று மாலை 4.15 மணியில் இருந்து சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல சேமக்காலையில்  திருப்பலி நிறைவேற்றப்பட்டு, திருப்பலி மிகவும் அமைதியாகவும், ஆசிர்வாதமாகவும் இறந்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து  நிறைவேற்றப்பட்டது.

திருப்பலியினை பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார்  ஒப்புக்கொடுத்திருந்தார், இன்றையத் திருப்பலியினை மறை ஆசிரியர்கள் சிறப்பித்திருந்தார்கள்.

திருப்பலி நிறைவில் அனைத்து கல்லறைகளும் அருட்தந்தையினால் ஆசிர்வதிக்கப்பட்டது. மேலும் உறவினர்களால் கல்லறைகளுக்கு மலர்கள் வைக்கப்பட்டு நினைவு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.








Comments