உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்.............

 உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்.............

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் முகமாகவும் ஸ்டெம் செல் நன்கொடையாளர் சேவையை அறிமுகப்படுத்தும் முகமாக Dream space academy, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை மற்றும் Help Ever Foundation இனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஆதரவோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தான முகாமிற்கு உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.
எதிர்வரும் 08.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று சாள்ஸ் மண்டபத்தில் காலை 8.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெறவுள்ளது.
நீங்கள் ஆர்வமாக இருந்தால், பதிவு செய்ய:
இரத்த தானம் செய்ய ஆர்வமுடைய அனைவரும் இவ்இரத்த தான முகாமில் கலந்து கொண்டு தங்களால் முடிந்த இரத்த நன்கொடையை வழங்கி ஓர் உயிரின் இருப்புக்கு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் உங்களது உன்னத சேவையை கௌரவித்து வைத்தியசாலையினால் அங்கீகரிக்கப்பட்ட இரத்தக் கொடையாளர்களுக்கான சான்றிதழும், வழங்கி வைக்கப்படும்.

Comments