ஆரையூர் விளையாட்டு கழகத்தால் நிவாரணபணி....

 ஆரையூர் விளையாட்டு கழகத்தால் நிவாரணபணி....

தற்போதைய வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  ஆரையம்பதி கிராமத்தில் ஆற்று நீர் வீட்டிற்குள் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரையூர் விளையாட்டு கழகம் ஒரு  நிவாரணப்பணி மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட 60 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு  2500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. 

இப்பணிக்காக புலம்பெயர்ந்து வாழும் ஆரையூர் விளையாட்டு கழக அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் உதவி கிடைக்கப்பெற்றதாக கழகத்தின் தலைவர் தெரிவித்தார்.









Comments