கல்முனை கிட்டங்கி பாலத்தில் ஒருவருடைய சடலம் மீட்பு...........

கல்முனை கிட்டங்கி பாலத்தில் ஒருவருடைய சடலம் மீட்பு...........

கல்முனை கிட்டங்கி பாலத்தில் நீரில் மூழ்கி கரை ஒதுங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் இன்று (29) மீட்கப்பட்டது.

கல்முனை - பாண்டிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ஜெகன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சுரேஷ் என்பவரே இவ்வாறு கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவிதன்வெளி – சவளக்கடை மரம் அரியும் ஆலயம் ஒன்றில் வேலை பார்க்கும் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை திரவந்தியமேட்டு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை எடுத்துச் சென்ற கடற்படையினர் குறித்த பகுதியில் சடலம் மிதப்பதை கண்டு அவற்றை கரை சேர்த்துள்ளனர்.

சடலம் மேலதிக விசாரனைகளுக்காக அங்கிருந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதேவேளை, மூன்றாவது நாளாகவும் நாவிதன்வெளி கல்முனை கிட்டங்கி பாலத்தினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் கருதிற் கொண்டு கடல் படையினரின் படகு சேவை இடம் பெற்று வருகின்றது.




Comments