காத்தான்குடிதள வைத்தியசாலை குருதி நன்கொடையாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம்..............
மட்டக்களப்பு, காத்தான்குடி தள வைத்தியசாலையின் கீழ் இயங்கி வரும் குருதி நன்கொடையாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம் இன்று காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் அலீமா ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் கலந்து கொண்டதுடன், இரத்த வங்கி தாதியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், சம்மேளனத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குருதி நன்கொடைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், 2025 ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாக தலைவராக வைத்தியர் அலீமா ரஹ்மானும், செயலாளராக ரிபாய் கலீல் மற்றும் பொருளாளராக ஏ.ஆர்.எம்.ரொஷான் உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டனர்.
Comments
Post a Comment