மட்டக்களப்பு களுவங்கேணி கிராம மக்களுடன் ஈ.பி.டி.பி கட்சியினர் விசேட சந்திப்பு.................
மட்டக்களப்பு களுவங்கேணி கிராமத்தில் உள்ள சமூக அமைப்புக்களிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது களுவங்கேணி ஆலயங்களின் பரிபாலன சபை நிர்வாகிகள், மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்களும் இதன் போது கலந்து கொண்டு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றியில் கரம்கோர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கட்சியின் வேட்பாளர் அந்தோணிசில் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment