கல்லடி கடற்கரையில் சிரமதானப்பணி.........
இன்றைய தினம் (17) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவி சுஜீவா அவர்களின் தலைமையில் கல்லடி கடற்கரை மற்றும் திருச்செந்தூர் கோவில் வரையிலான பகுதியில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் என்ற தொனிப்பொருளில் சிரமதானப்பணி ஒன்று இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் நிஷாந்தினி அருள்மொழி அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் சசிகுமார் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் தயாசீலன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அத்தோடு இந்நிகழ்விற்கான பங்களிப்பினை ஜனாதக்ஷன் அமைப்பானது வழங்கியிருந்தது. அவ் அமைப்பின் கள உத்தியோகத்தர் பெலிஸ்ட்டா மதுவந்தி, இயற்கைமொழி அமைப்பின் ஸ்தாபகர் காயத்ரி அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து சுற்று சூழலியல் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரசாந்தினி அவர்களும் கலந்து கொண்டனர். மண்முனை வடக்கு பிரதேச சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு, மண்முனை வடக்கிலிருந்து மொத்தமாக 45க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
Comments
Post a Comment