தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு வேட்பாளர் பிரபுவை ஆதரித்து சுனில் ஹந்துன்னெத்தி மட்டக்களப்பில்.......

 தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு வேட்பாளர் பிரபுவை ஆதரித்து சுனில் ஹந்துன்னெத்தி மட்டக்களப்பில்....... 

நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் பிரச்சாரங்கள் தற்போது களை கட்டத் தொடங்கியுள்ளன. கட்சியின் பிரபலங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரங்களை செய்து தம் கட்சியின் வேட்பாளர்களுக்கான வாக்குகளை கேட்டு வருகின்றனர்.

இன்று (01) தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம் மட்டக்களப்பு பிள்ளையாரடி தேர்தல் காரியாலயத்தில் மட்டக்களப்பு வேட்பாளர் கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இன்றைய இக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும், முன்னால் பாராளுமன்ற  உறுப்பினரும், மாத்தறை மாவட்ட வேட்பாளருமான சுனில் ஹந்துன்னெத்தி  பிரதம அதிதியாக கலந்து கொண்டு தம் கட்சி சார்ந்த வேட்பாளரான கந்தசாமி பிரபு அவர்களுக்காக பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

இப்பிரச்சார கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களும், கட்சி ஆதரவாளர்களும் மற்றும் பிரதேச வாழ் பொது மக்களும் கலந்து கொண்டனர். 

Comments