75வருட பூர்த்தியை முன்னிட்டு பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் உதைபந்தாட்ட போட்டி......

 75வருட பூர்த்தியை முன்னிட்டு பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் உதைபந்தாட்ட போட்டி......

மட்டக்களப்பில் 75 வருடங்களாக முன்னிலைப்படுத்தி வரும் பாடுமீன் பொழுதுபோக்கு கழகம் தம் ஆண்டு நிறைவை தம் கழக அங்கத்தவர்களை ஒன்றினைப்பதன் மூலம் ஒரு உதைபந்தாட்ட போட்டியை ஏற்பாடு செய்து நடாத்தி இருந்தது.

தம் கழகத்தில் உள்ள மூத்த, இளம் அங்கத்தவர்களை ஒன்றினைத்து மூன்று அணிகளாக வகுத்து ஒவ்வொரு அணிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உதைபந்தாட்ட போட்டியானது (02)ம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்தப்பட்டது.

ஒரு அணிக்கு வைத்தியர் கருணாகரன் அவர்களும், மற்றைய அணிக்கு வைத்தியர் நவலோஜிதன் அவர்களும், மற்றைய அணிக்கு கழகத்தின் தலைவரும், பிரபல  வர்த்தகருமான பால்ராஜ் செல்வராசா ஆகியோரும் பொறுப்பேற்றதுடன், இவர்களின் முழு அனுசரனையில் இப்போட்டிகள் நடைபெற்றன.

அதிதிகளாக முன்னாள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன் அவர்களும், மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான சண்முகம் சிவபாதசுந்தரம் அவர்களும், மற்றுமொரு வர்த்தகரான சண்முகம் சண்முககேசன் அவர்களும் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.









Comments