தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை..............
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை..............
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சை கேள்விகள் வெளியானமை தொடர்பில் ஆராய்ந்துள்ள மூன்று குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமையும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் குழுவின் விசாரணைகளின் அடிப்படையில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் மேற்கொள்வார் என அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மற்றும் முடிவுகளை வெளியிடுவதை இடை நிறுத்தி இம்மாதம் 18ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்த நீதியரசர்கள், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மேலதிக சட்ட மா அதிபர் விராஜ் தயாரத்னவை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துடனும் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை செல்லுபடியற்றதாக்கி அதை மீண்டும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக தொடர்புடைய பிற அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்குமாறு பணித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் போது சில கேள்விகள் வெளியானதினால் பரீட்சார்த்திகளுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன்இ மனுக்களில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை வழங்குமாறும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
Comments
Post a Comment