அஸ்வெசும உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத சமுர்த்தி சலுகைகளுக்கு உரித்துடையவர்கள் ஆராய 10 பேர் கொண்ட விசேட குழு...............
அஸ்வெசும உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத சமுர்த்தி சலுகைகளுக்கு உரித்துடையவர்கள் ஆராய 10 பேர் கொண்ட விசேட குழு...............
மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
'அஸ்வெசும' சமூக நல உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத சமுர்த்தி சலுகைகளுக்கு உரித்துடையவர்கள் தொடர்பில் உள்ளூர் மட்டத்தில் கண்டறிவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு உரிய குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment