கந்தசஷ்டி விரதம் இன்று (02) ஆரம்பம் ............
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் 02ம் திகதி இன்று துவங்க உள்ளது. நவம்பர் 07ம் திகதி வியாழக்கிழமை அன்று, விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக முருகப் பெருமான் அவதரித்த விசாகம் நட்சத்திரம் வரும் நாளிலேயே கந்தசஷ்டி எனப்படும் மகாகந்தசஷ்டி விழா துவங்க உள்ளது கூடுதல் சிறப்பானதாகும்.
யாரெல்லாம் சஷ்டி விரதம் இருக்கலாம்?...
பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் தான் சஷ்டி விரதம் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் மட்டுமல்ல, வேலை, திருமணம், கடன், பொருளாதார நெருக்கடி என எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும், எப்படிப்பட்ட மோசமான நிலையி்ல வாழ்க்கை இருந்தாலும் அது மாற வேண்டும் என்பதற்காக சஷ்டி விரதம் இருக்கலாம்.
அனைத்தையும் விட மிக முக்கியமாக முருகப் பெருமானின் முழு அருளையும் பெற வேண்டும் என நினைக்கும் முருக பக்தர்கள் யாராக இருந்தாலும் சஷ்டி விரதம் இருக்கலாம்.
அதே சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள், நீண்ட கால நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உபவாசமாக இருப்பதை தவிர்த்து, முருகப் பெருமானை மனதார நினைத்து விரதம் இருப்பது சிறப்பானதாக இருக்கும்.
கந்தசஷ்டி விரத முறைகள் :
*விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும்.
*விரத நாட்களில் அதிகாலையில் துயிலெழுந்து நீராட வேண்டும்.
*காலையும், மாலையும் வீட்டில் விளக்கேற்றி கந்தனை மனதார வழிபட வேண்டும்.
* விரத காலங்களில் கந்தசஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, கந்தகுரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்ய வேண்டும்.
* விரத நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
* இவ்விரதத்தின் போது ஆறு நாட்களும் ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள் :
*இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும்.
*நோய்கள் நீங்கும்.
*வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும்.
*குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
*வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*கடன் தொல்லை நீங்கும்.
*அதுமட்டுமின்றி வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும்.
*நிம்மதியும், சந்தோஷமும், உற்சாகமும் வாழ்வில் நிறையும்.
Comments
Post a Comment