காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை...............

காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை...............

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று டெங்கு சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீனின் தலைமையிலும் மேற்பார்வையிலும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அமானுல்லாஹ் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள வீடுகள் கடைகள் என்பன சோதனை செய்யப்பட்டன. டெங்கு நோயை ஏற்படுத்தும் டெங்கு குடம்பிகளை அழிக்க இதன் போது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.



Comments