தமிழர் வராலாற்று பாரம்பரியம் காக்க வேண்டும்: சரவணபவன்....

 தமிழர் வராலாற்று பாரம்பரியம் காக்க வேண்டும்: சரவணபவன்....

தமிழர் வராலாற்று பாரம்பரியம் காக்க வேண்டும், மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் 3D வடிவமைப்பிலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

தமிழர் வரலாறானது இலங்கையில் திரிபடையச் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் உலகில் மூத்த மொழி தமிழ் மொழியாகும், நாம் மூத்த குடிகள். எமது வரலாற்று பாரம்பரியங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அதனைப் புத்துயிர்பெறச் செய்ய வேண்டும். என கலைஞர்களுடனான சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் தி.சரவணபவன் உரையாற்றினார்.

சகோதர இனக் கலைஞர்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பது போன்று தமிழ் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் இருந்தும் புறக்கணிக்கப்படுகின்றமை, இசைவாத்தியக் கருவிகள் புனரமைப்பு ஏற்பாடுகள் இன்மை போன்ற முறைப்பாடுகளை முன்வைத்த போது. இதற்கான முறைப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளை நான் கட்டாயம் செய்வேன். மக்கள் அதிகாரம் வழங்கும் போது அதனை செய்வது எனக்கு இன்னும் இலகுவாக இருக்கும். நான் மாநகர முதல்வராக இருக்கும் போது காந்திப் பூங்காவில் மாதந்தோறும் 'பௌர்ணமி கலை இலக்கிய விழாவை' நடாத்தியிருந்தோம். அதன் மூலமாக கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவது எங்களது நோக்கமாக இருந்தது.

எமது கலை எமது வரலாறு அழியக்கூடாது, மட்டக்களப்பிற்கு என்று வரலாறு உள்ளது. புளிமாறன், உலகநாச்சி என பலர் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களுக்கும் எமக்கும் என்ன தொடர்பு என வருங்கால சந்ததிகளுக்கு நாம் காட்ட வேண்டும் 'காந்திப்பூங்காவில் அருங்காட்சியகம் அமைத்து அங்கு 3D திரையில் எமது பரம்பரை ஆட்சியாளர்களின் வரலாறு பாகுபலி படத்தினைப் போல காட்சிப்படுத்தப்பட வேண்டும்' என்பதே எனது திட்டம்.

இதன் மூலம் எமது வரலாறு எல்லோரையும் சென்றைடையும் ஏடு புத்தகத்தில் உள்ள விடங்களை டிஜிடல் மயமாக்கி டிஜிடல் நூலகம் அமைத்துள்ளோம். அதனை விஸ்தரித்து எமது சிறார்கள் படிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments