மட்டக்களப்பில் ஒரே இரவில் பல வீடுகளில் கொள்ளை............
மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகளை உடைத்து 60 பவுண் தங்க ஆபரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினமன்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வழமைபோல வீடுகளை பூட்டிவிட்டு அப்பகுதி மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள 8 வீடுகளின் யன்னல் கதவு மற்றும் சமையலறை யன்னல் கதவுகளை உடைத்து வீடுகளுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அலுமாரிகளை சோதனையிட்டு இரண்டு வீடுகளில் 60 பவுண் தங்க ஆபரணங்களை திருடியுள்ளனர்.
ஏனைய வீடுகளில் எந்த விமதமான பொருட்களும் கிடைக்காததால் அங்கிருந்து அவர்கள் திரும்பி சென்றுள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு மோப்ப நாய்களுடன் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment