மட்டக்களப்பு, பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலயத்தில் ஒலிபரப்பு சாதனம், திருடப்பட்டுள்ளது.............

 மட்டக்களப்பு, பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலயத்தில் ஒலிபரப்பு சாதனம், திருடப்பட்டுள்ளது.............

மட்டக்களப்பு, பாலமீன்மடு புதுமைமிகு குழந்தை இயேசு ஆலயத்தின், கதவு உடைக்கப்பட்டு, ஒலிபரப்புச் சாதனமொன்று திருடப்பட்டுள்ளது.

நேற்றிரவு இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆலய வழிபாடுகள் நேற்று நிறைவடைந்து, ஆலயம் மூடப்பட்ட வேளை திருடப்பட்ட ஒலிபரப்புச் சாதனம், ஆலயத்தில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில், கதவு உடைக்கப்பட்டமை மற்றும் ஒலிபரப்புச் சாதனம் திருடப்பட்டமை தொடர்பில், கொக்குவில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Comments