இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கல்குடாத்தொகுதிக்கான தேர்தல் பணிமனை, திறந்து வைப்பு..............
இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் கல்குடா தொகுதிக்கான தேர்தல் பணிமனை இன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வந்தாறுமூலையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வைத்தியர் இ.சிறிநாத்தின் தேர்தல் பணிகளுக்காக இப் பணிமனை பயன்படுத்தப்படவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் உட்பட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment