மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், விசேட டெங்குஒழிப்பு வேலைத்திட்டம்..............

 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், விசேட டெங்குஒழிப்பு வேலைத்திட்டம்..............

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரனின் பணிப்புரைக்கமைய, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில், தொற்றா நோய் பிரிவு வைத்தியர் கார்த்திகா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பூச்சியியலாளர் கே.தர்சினி, பொதுசுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கருவேப்பங்கேணி, ஜெயந்திபுரம் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போது, டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான இடங்கள் கண்டறியப்பட்டு, அவை அழிக்கப்பட்டதுடன், வீடுகள் மற்றும் பொது இடங்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Comments