மக்களுக்கான அரசியலை நாம் ஒரு தொண்டு அடிப்படையிலேயே முன்னெடுத்து வருகின்றோம்: திலிப் குமார்
(வரதன்) தேசிய மக்கள் சக்தி மக்கள் விரும்பும் அரசியல் வேலைத் திட்டங்களையே முன்னெடுத்து வருகின்றது, அரசியலை நாம் ஒரு தொண்டு அடிப்படையிலேயே முன்னெடுத்து வருகின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு வேட்பாளர் வா.திலிப்குமார் மட்டக்களப்பில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களிக்காத மக்கள் கூட இன்று நாம் அவருக்கு வாக்களித்து இருக்கலாமே என்ற எண்ணத்தில் இருக்கின்றனர், புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்காத மக்கள் மீதும் தற்போது அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார் ஜனாதிபதி. அனைவரும் விரும்பும் ஒரு ஜனாதிபதியாக அவர் தற்போது காணப்படுகின்றார்.
கடந்த காலங்களில் இப்பகுதியில் மோசமான ஒரு அரசியல் கலாச்சாரமே காணப்பட்டது, ஆனால் எமது கட்சி மக்கள் விரும்பும் அரசியல் வேலைத் திட்டங்களையே முன்னெடுத்து வருகின்றது. நமது கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சலுகைகளை பெறுவதில்லை மக்களுக்கான அரசியலை நாம் ஒரு தொண்டு அடிப்படையிலேயே முன்னெடுத்து வருகின்றோம்.
நாங்கள் சட்டவிரோத அரசியலை முன்னெடுப்பதில்லை மக்களுக்கான அரசியல் பணிகளையே முன்னெடுத்து வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment