நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு.................

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு.................

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீட்டர்  ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன்  புதிய விலை 371 ரூபாவாகும்.

இதேவேளை, ஒக்டேன் 92 பெட்ரோல்  லீட்டர்  ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.  மேலும், மண்ணெண்ணெய்யின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 

விலை சூத்திரத்திற்கு அமைய மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு முந்தைய கடந்த 10 மாதங்களில் எரிபொருட்களின் விலை மூன்று தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து தடவைகள் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளன.


Comments