சந்திவெளி சந்தை தொகுதி வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி............
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குகளை தம்வசமாக்கி கொள்வதற்காக வேட்பாளர்கள் வீடு விடாக, தெருவிற்கு தெரு, கடைத்தொகுதி என பல இடங்களுக்கும் அவர்களும் சென்று, தம் ஆதரவாளர்களையும் அனுப்பி மக்களிடம் வாக்கு கேட்கும் சுவாரஸ்சியமான விடயம் தற்போதைய கால கட்டத்தில் இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன்.
இதற்கு மட்டக்களப்பு மாவட்டமும் விதிவிலக்கல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் வாக்கு கேட்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புதிய மாற்றத்துடன் களம் புகுந்துள்ள தேசிய மக்கள் சக்தியும், இந்த வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் கந்தசாமி பிரபு சந்திவெளி சந்தை தொகுதியில் வியாபாரிகள், பொது மக்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து, தம் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் போது தேசிய மக்கள் சக்திக்கு தங்கள் வாக்குக்களை பதிவிட்டு கொள்ளுமாறும் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment