ஏறாவூர் பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்............
(உமர் அறபாத்) நேற்றிரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் மரணித்துள்ளார்.
மரணமானவர் ஏறாவூர் ஐயங்கேணி காட்டுமாமரத்தடி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய முகம்மது நுலார் முகம்மது முஜாஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிசாரின் பணிப்புரைக்கு அமைய சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
Comments
Post a Comment